Categories: சினிமா

பி.எம்.டபிள்யூ ஆர்1200 ஜிஎஸ்(BMW R1200 GS) பைக்கில் வலம் வந்த நடிகர்..!

Published by
Dinasuvadu desk

 

மலையாள திரையுலக நடிகர் மம்முட்டி தனது பிஎம்டபிள்யூ பைக்கில் கொச்சி ரோட்டில் வலம் வரும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் மும்முட்டி நடிக்கும் குட்டனாடன் பிளாக் என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு சமீபத்தில் கேரள மாநிலம் எர்ணாகுளம் கொச்சி ஆகிய பகுதிகளில் நடந்தது. படப்பிடிப்பின் ஒரு பாகமாக நடிகர் மம்முட்டி பைக்கில் வருது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதில் அவரது அவருக்கு சொந்தமான பி.எம்.டபிள்யூ ஆர்1200 ஜிஎஸ் என்ற பைக்கை ஓட்டி வந்தார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம் அவர் பைக் ஒட்டி வரும் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் மம்முட்டியும் அவரது மகனான துல்கர் சல்மானும் கார், பைக் மீது அலாதிபிரியம் கொண்டவர்கள். இவர்களில் காரஜில் ஏராளமான கார் பைக் கலெக்ஷன்கள் உள்ளன. சமூகவலைதளங்களில் பரவிய காட்சியில் மம்முட்டி ஓட்டி வரும் பிஎம்டபிள்யூ ஆர்1200ஜிஎஸ் என்ற பைக் அந்நிறுவனத்தின் லிமிட்ட் எடிசனாக வெளியிடப்பட்டது.

4 வால்வு ஜிஎஸ் பாக்ஸர் டிவின் ரக இன்ஜின் தயாரித்து 15 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் இ்நத பைக் தயாரிக்கப்பட்டது. இந்த பைக் 1170 சிசி இரண்டு சிலிண்டர் ஹரிசான்டல் அப்போஸ்டு பாக்ஸர், 4வால்வு சிலிண்டர் இன்ஜின் கொண்டது. இது 125 எச்பி பவரை வெளிபடுத்தும். கடந்த 2009ம் ஆண்டு வெளியான இந்த பைக் அப்பொழுது இந்திய மதிப்பில் ரூ 10.62 லட்ச ரூபாக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கார்,பைக் வாங்குவதில் மட்டும் அல்ல அவர் வைத்திருக்கும் கார் பைக்குகளுக்கு 369 என்ற நம்பரையும் தேடி பிடித்து வாங்குவார். அவரது கார்கள் அனைத்தும் 369 என்ற எண்களுடனேயே இருக்கும்.

ஜாக்குவார் எக்ஸ் ஜே நடிகர் மம்முட்டி ஜாக்குவார் எக்ஸ் ஜே கார் வைத்திருக்கிறாகர். இந்த காரின் விலை ரூ 94.81 லட்சத்தில் ரூ2.08 கோடி வரை விற்பனையாகி வருகிறது. இந்த காரின் நம்பரும் 369 தான்.

டொயோட்டோ லாண்ட் க்ரூஸர், டொயோட்டோ நிறுவனத்தின் உயர்ரக எஸ்யூவி கார் இது. இது 4.5 லிட்டர் டர்போ டீசல் வி8 இன்ஜின் கொண்டது. இது 262 பிஎச்பி பவரையும் 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதன் விலை சுமார் 1.19 கோடி ரூபாய். இந்த காரும் 369 என்ற எண் கொண்டது.

ஆடி ஏ7 இது ஆடி நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் கார் லுக்கை கொண்ட சொகுசு கார். இது வி6 டார்போ டீசல் இன்ஜின் கொண்டது. இது 241 பிஎச்பி பவரும் 500 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்தியாவில் இந்த காரின் விலை சுமார் ரூ 85.88 லட்சம்.

இதுபோக மேலும் பல கார்கள் அவரது காரஜில் உள்ளன.

Published by
Dinasuvadu desk
Tags: BMW R1200 GS

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

7 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

7 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

7 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

8 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

8 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

8 hours ago