இப்படை வெல்லும் படத்தின் டீசர் வெளியீடு.. இனியாவது வெல்வாரா..? உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இப்படை வெல்லும் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தூங்கா நகரம், சிகரம் தொடு ஆகிய படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இப்படை வெல்லும். இதில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.
அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரித்துள்ளது.
இமான் இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தொடர்ந்து வெளியான படங்கள் அனைத்தும் பெரிதாக அவருக்கு மாற்றத்தை ஏற்படுத்தாத நிலையில் இந்த திரைப்படம் அவருக்கு நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாக்கலாம்….