இவர்களின் படங்கள் அடுத்த தீபாவளிக்கு வெளியாகுமா!வெளியானால் என்னவாகும் …
தமிழகத்தில் சினிமாவை பொறுத்தவரை நல்ல வரவேற்ப்பு எப்போதுமே உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய்,அஜித், சூர்யா ஆகியோரின் திரைப்படங்களின் பணிகள் ஒரே மாதத்தில் துவங்க உள்ளது.
ஜனவரி மாத த்தில் துவங்கும் இவர்களின் படங்கள் அடுத்தாண்டு தீபாவளியை குறிவைத்துள்ள நிலையில் இவர்களது ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம், ஏ ஆர் முருகதாஸ் விஜய் கூட்டணியின் படம் மற்றும் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 36வது படம் என ஒரே நேரத்தில் இப்படங்கள் துவங்க உள்ளது. இந்த படங்கள் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான இந்த மூவரின் திரைப்படங்களும் ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நாளில் வெளியாகி மோதிக்கொண்டது.இது தான் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது .மூன்று பேரின் ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.