விஜயின் மெர்சல் படத்தின் நீண்ட நாளாக இருந்த தடை நீங்கியது.. விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி!
மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புறா காட்சிகள், கிராஃபிக்ஸ் என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்கப்படாமல் இருந்தது.இதனால் படம் வெளியாவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது.இதனால் தணிக்கை வாரியமும் சான்றிதழ் வழங்கவில்லை. இந்நிலையில் விலங்குகள் நல வாரியத்தின் டெல்லி பிரிவினர் மெர்சல்திரைப்படத்தை ஆய்வு செய்தனர்.
படத்தில் இடம்பெற்றுள்ள பாம்பு, புறா காட்சிகள் குறித்த ஆவணங்களை மெர்சல் படக்குழு தாக்கல் செய்தது. ஆவணங்களை விலங்குகள் நல வாரிய நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர் மெர்சல் திரைப்படத்திற்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மெர்சல் படக்குழு தரப்பில் தாக்கல் ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் சில காட்சிகளை நீக்க அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது. படத்துக்கு இருந்த தடை நீங்கியதால் விஜய் ரசிகர்கள், தீபாவளியை ‘மெர்சல் தீபாவளி’-யாகக் கொண்டாடும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
ஏற்கனவே படத்தின் தலைப்பிற்கு ஏற்கனவே பிரச்சனை இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே படத்தின் தலைப்பிற்கு ஏற்கனவே பிரச்சனை இருந்தது குறிப்பிடத்தக்கது.