சமீபத்தில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலெட்சுமி சரத்குமார் நடித்துகொண்டிருக்கும் படம் சக்தி .அண்மையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் அந்த படத்தை இளம் பெண் இயக்குனர் இயக்குகிறார் .
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கம்பீரமாக இருக்கும் வரலட்சுமியின் போஸ்டரை வெளியிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் பிரியதர்ஷினி.
தனக்கென்று ஒரு தனி பாணியை வைத்துக்கொண்டு பல வெற்றிப் படங்களை இயக்கும் மாய மன்னன் மிஸ்கினின் உதவி இயக்குனர்தான் இந்த படத்தின் பிரியதர்ஷினி.
திரையுலகமே ஆச்சரியத்துடன் பார்க்கும் அளவிற்கு தனது முதல் போஸ்டரில் தான் யார்? தனது திறமை என்ன? என்பதை அறிய செய்தவர்.
பிரியதர்ஷினியின் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த கலைப்புலி எஸ்.தாணு, சரத்குமார் என பல்வேறு திரைப் பிரபலங்கள் என நிறைய பேர் அவரை வெகுவாக பாராட்டி ஊக்கப்படுத்தி உள்ளனர் .
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கம்பீர லுக்கில் இருக்கும் வரலக்ஷ்மி, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம்.
இந்த நிலையில், தற்போது இந்தப் படத்தில் முக்கியமான கதபாத்திரத்தில் பிக் பாஸின் டைட்டில் வின்னர் ஆரவ் நடிக்கப் போகிறார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களீல் இருந்து வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை மாடலாகவும் சரி, ஓகே கண்மனி படத்திலும் சரி ஆரவ் நடித்திருந்தாலும் பிக் பாஸால் தான் அனைவரும் பேசுமளவிற்கு பிரபலமாகியுள்ளார்.
பிக்பாஸ் டைட்டிலை வென்றபிறகு சமீபத்தில் மணிரத்னம் கூட இவரை வீட்டிற்கு அழைத்துப் பேசியுள்ளார்.
இந்த நிலையில், பிக் பாஸுக்கு பிறகு ஆரவ், பிர்யதர்ஷினியின் “சக்தி” படத்தில் ஒப்பந்தமானால் இது அவருக்கு பெரிய அளவில் பேசப்படும் படமாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
பிரியதர்ஷின் இயக்கத்தில் வரலட்சுமி நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது எனினும் ஆரவ் இந்த படத்தில் நட்டிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.