கடந்த மாதம் 21 ஆம் தேதி, பார்ட்டி படப்பிடிப்பு முடிந்ததைக் கொண்டாடும் விதமாக சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் உணவு விடுதியில் பார்ட்டி கொண்டாடிவிட்டு அதிகாலை காரில் சென்றார் நடிகர் ஜெய்.
அவர் சென்ற கார் நிலை தடுமாறி அடையாறு பாலத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. அவர் குடிபோதையில் கார் ஓட்டினார் என்பது தெரியவந்ததால், போலீஸார் அவருக்கு ரூ. 500 அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர் மீது குடிபோதையில் கார் ஓட்டியது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது, லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டியது, போன்ற 4 பிரிவுகளின் கீழ் அடையார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து குடிபோதையில் வாகனம் ஓட்டி, விபத்தும் ஏற்படுத்தியது தொடர்பாக நடிகர் ஜெய்க்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் ஜெய் விளக்கமளிக்க ஆஜராகவில்லை. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் நடிகர் ஜெய்க்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், இரண்டு நாட்களுக்குள் ஜெய் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, பயந்து போன ஜெய் தற்போது, கைது செய்ய வேண்டாம்….நானே வந்து விடுகிறேன் என, சைதாபேட்டை நீதிமன்றத்தில் நேரில் வந்து ஆஜரானார்
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…