கேரளாவில் மெர்சலின் வியக்கவைக்கும் புதிய வசூல் சாதனை
தீபாவளியன்று தளபதி விஜய் நடித்து அட்லீ இயக்கிய மெர்சல் திரைப்படம் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. மேலும் இதில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, மருத்துவ குறைகள் மக்களிடம் பெரும் வரவேற்பையும் அரசியல்வாதிகளிடம் சர்ச்சை கருத்துகளையும் பெற்றது. இதுவே இப்படம் மக்களிடம் சென்று வரவேற்ப்பை பெற காரணமாக அமைந்து விட்டது.
இப்படம் தமிழகம் மட்டுமல்லாது கேரளா மற்றும் பல இடங்களிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் கேரளாவில் மட்டும் 5 நாட்களில் ரூபாய் 15.97 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
#இந்த வெற்றிக்கும் பாஜக-விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை