தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட திரை படத்தின் இசை …வெளியீட்டு தேதி அறிவிப்பு !
தமிழ் சினிமாவின் பிரமாண்ட படமாக உருவாகிவருவது 2.0.இந்த படம் மிகவும் அதிக பொருள் செலவில் உருவாகிறது .
ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோரை வைத்து டைரக்டர் ஷங்கர் இயக்கி உள்ள படம் 2.0. இப்படத்தை ஜனவரி மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் மிக பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இசை வெளியீட்டு விழாவை துபாயில் நடத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட ஷங்கர், தற்போது இவ்விழா அக்டோபர் 27 ல் நடக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியும் நடக்கும் என அறிவித்துள்ளார்.
இதை அவர்கள் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.