படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள் !குற்றம் சாட்டும் ராய் லட்சுமி…
சமீபத்தில் பாலியல் தொல்லை குறித்து பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கூறியது பேரும் கட்டுதீயாக பரவியது . இந்நிலையில் காமக்கொடூர தயாரிப்பாளர்கள் சிலரை தன் வாழ்வில் சந்தித்ததாக நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் தயாரிப்பாரள் ஹார்வி வெயின்ஸ்டீன் பட வாய்ப்புக்காக நடிககைளை படுக்கைக்கு அழைத்துச் சென்ற விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து ராய் லட்சுமி கூறியதாவது,
ஹார்வி வெயின்ஸ்டீன் போன்றவர்கள் சினிமா துறையில் உள்ளார்கள். தங்களிடம் அதிகாரம் இருப்பதால் அப்படி செய்கிறார்கள். ஆனால் அனைவரும் அவரை போன்று இல்லை.
சினிமா துறையில் பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும் சில நல்ல மனம் உள்ள தயாரிப்பாளர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
நானும் என் வாழ்வில் அது போன்ற சில தயாரிப்பாளர்களை பார்த்துள்ளேன். ஆனால் அவர்களிடம் எப்படி பேசி நடையை கட்டுவது என்று எனக்கு தெரியும்.
தற்போது சோஷியல் மீடியா இருப்பதால் வெயின்ஸ்டீன் மாதிரி ஆட்கள் சேட்டை செய்யும் முன்பு பல முறை யோசிப்பார்கள். சரியான மேனேஜர் இல்லாததால் வளர்ந்து வரும் நடிகைகளே இது போன்ற தயாரிப்பாளர்களிடம் சிக்குகிறார்கள்.
உங்களுக்கு நல்ல மேனேஜர் இருந்தால், போர்ட்ஃபோலியோவை கவனிக்க சரியான குழு இருந்தால் இது போன்றவர்கள் உங்களை நெருங்க விட மாட்டார்கள். மேனேஜர் இல்லாமல் தானாக சென்று வாய்ப்பு கேட்கும் நடிகைகளே பிரச்சனையில் சிக்குகிறார்கள். மோசமான ஆள் யாரையாவது சந்தித்தால் நான் சக நடிகைகளை எச்சிரப்பது உண்டு என்கிறார் ராய் லட்சுமி.