ரஜினி பார்த்தது சந்தோஷம் : கமல் நெகிழ்ச்சி
BiggBoss நிகழ்ச்சியில் கடந்த வாரம் வையாபுரி அவர்கள் வெளியேற்றப்பட்டார். பொதுவாக எலிமினேட் ஆகுபவர்கள் கமல்ஹாசனுடன் கலந்துரையாடிவிட்டு தான் செல்வார்கள்.
அப்படி வையாபுரியும் கமல்ஹாசனுடன் சிறுது நேரம் கலந்துரையாடினார். அப்போது வையாபுரி, அண்மையில் தன் குடும்பத்துடன் ரஜினி அவர்களை நேரில் சந்தித்தேன்.
அப்போது நான் உங்களுடன் நடித்த படங்களை பற்றி அவர் பேசினார் என்று கூறினார். உடனே கமல்ஹாசன் ரஜினி என்னுடைய படங்களை பார்த்தது தனக்கு பெருமையாக இருப்பதாக கூறியுள்ளார்.