சமந்தா நாக சைதன்யா திருமண பட்ஜெட் இவ்வளோவா….?
கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் தற்போதைய பரபரப்பான எதிர்ப்பார்ப்பு சமந்தா, நாக சைத்தன்யா திருமணம்தான். இவர்களது திருமணம் கோவாவில் அக்டோபர் 6, 7 தினங்களில் இந்து, கிறிஸ்துவ முறைப்படி நடக்க இருக்கிறது.
எளிமையாக நடக்கவிருக்கும் திருமணம் என்று கூறப்படும் இந்நிகழ்ச்சிக்கு மொத்தம் 150 அழைப்புகள் மட்டும் தான் விநியோகிக்கப்பட்டுள்ளதாம். ராம் சரண், ராணா, வெங்கடேஷ், ராகுல் ரவீந்திரன் அவரது குடும்பம் ஆகிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. மொத்தமாக இவர்களது திருமணச் செலவு மட்டும் ரூ. 10 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.