இயக்குநர் சீனுராமசாமியுடன் கைகோர்க்கும் அதர்வா முரளி

Default Image

‘தர்மதுரை’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சீனுராமசாமியும், விஜய்சேதுபதியும் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள் என்றும் இந்த படத்திற்கு ‘மாமனிதன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்று சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. ஆனால் மாமனிதன் படம் துவங்குவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.விஜய்சேதுபதி கைவசம் இப்போது நிறைய படங்களில் நடித்து வருவதால ‘மாமனிதன்’ படத்திற்கு உடனடியாக கால்ஷீட் கொடுக்கவில்லையாம். எனவே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க காலதாமதம் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுவரை சும்மா இருக்க வேண்டாம் என்பதற்காக மாமனிதன் படத்துக்கு முன்னதாக ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் சீனுராமசாமி. இப்படியொரு முடிவுக்கு வந்த பிறகு அதர்வாவை சந்தித்து கதை சொன்னார் சீனு ராமசாமி. கதையைக் கேட்ட அதர்வா உடனடியாக கால்ஷீட் தர முன் வந்திருக்கிறார். இந்த படத்திற்கு ‘ஒரு ஜீவன் அழைத்தது’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் நடக்கும் த்ரில்லர் கதையான இந்தப்படத்தில் அதர்வா கல்லூரி மாணவனாக நடிக்கிறார்.

கதாநாயகிக்கான தேர்வு நடந்து வருகிறது. தமன்னா, அல்லது கேத்ரின் தெரசா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்