தமிழில், ’பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘பையா’, ‘வித்தகன்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ உட்பட சில படங்களில் வில்லனாக நடித்தவர், இந்தி நடிகர் மிலிந்த் சோமன்.இவருக்கு வயது 51 ஆகுதாம்.
இந்தியாவில் மிகவும் பிரபல மாடலாக இருந்த இவர், மைலேனி என்பவர் காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் அங்கிதா கொன்வார் என்ற 18 வயது பெண்ணை மிலிந்த் காதலிப்பதாக, கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானது. இருவருவம் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டனர். இந்நிலையில் டெல்லியில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் புதன்கிழமை இருவரும் ஜோடியாக கலந்துகொண்டனர். பின்னர், அங்கு இவர்கள் எடுத்துக்கொண்ட செல்ஃபியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மிலிந்த், ’பிக்சர் ஆஃப் த டே’ என்று கூறியிருந்தார். இதைக் கண்ட நெட்டிசன்கள் சிலர், சூப்பர் ஜோடி என்று வாழ்த்தி இருந்தனர். சிலர் கடுமையாக கலாய்த்துவிட்டனர். ‘பக்கத்தில் இருப்பது உங்கள் மகளா?’ என்று கேட்டுள்ளனர். இருவருக்குமான வயது வித்தியாசம் காரணமாக அவர்கள் இவ்வாறு கேள்வி கேட்டுள்ளனர். வழக்கம் போல இதைக் கண்டுகொள்ளவில்லை நடிகர் மிலிந்த்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…