ஜூலி நடிக்கவுள்ள புதிய திரைப்படம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று அதன் மூலம் பிரபலமடைந்தவர்களில் ஜூலியும் ஒருவர்.
இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு அதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கபட்டார்.
இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெற்ற பேரை பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கெடுத்துகொண்டார் என்பதே உண்மை.
மேலும் இவர் வலைதளவாசிகளால் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல விளம்பர பட இயக்குனர் பாபா பகுர்தீன் தான் அவர் இயக்கிய விளம்பர வீடியோவில் ஜூலியை நடிக்கவைத்துள்ளார். அந்த விளம்பரம் ராமநாதபுரம் இலாஹி ஷாப்பிங் மாலுக்காக எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பாபா பகுர்தீன் இயக்க உள்ள புதிய படத்தில் ஜூலிக்கு கதாநாயகிக்கு நிகரான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.