நாசா விஞ்ஞானி ஹைதராபாத்தில் கைது.. இளம் ஹீரோக்களுடன் தொடர்பு
போதைப்பொருள் விற்பனை வழக்கில் நாசா விஞ்ஞானி ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தெலுங்கு திரைத்துரையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாசா விண்வெளி ஆய்வுக்கழகத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் அனீஷ். இவர் போதைப் பொருள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து கோகைன் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரூத்தூர் அகர்வால் என்பவருடன் விஞ்ஞானி அனீஷ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெலுங்கு திரை பிரபலங்களுக்கும் இதில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக 3 இளம் ஹீரோக்கள், 4 இயக்குநர்கள், 2 தயாரிப்பாளர்கள் மற்றும் 4 சண்டை பயிற்சியாளர்களுக்கு ஹைதராபாத் கலால் போலீசார் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர். கெல்வின், பென், நிக்கில் ஆகியோர் திரைத்துறையினருக்கு போதை பொருள் சப்பளை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
கெல்வின் அண்மையில் ஹைதராபாத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. போதை பொருள் விவகாரத்தில் தெலுங்கு திரைத்துறையினருக்கு தொடர்பு என வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.