என்னடா இது மெர்சல் படத்திற்கு வந்த புதிய சோதனை …!
ஜிஎஸ்டி, கேளிக்கை வரி என இரண்டு வரிகளை சினிமாவிற்கு விதித்துள்ளது மத்திய ,மாநில அரசுகள் . இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.இதனால் திரைப்படத் தயாரிப்பாளரும் , வினியோகஸ்தர்களும் மற்றும் ஏழை எளிய மக்களும் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர்.இந்த காரணத்தால் கடந்த வாரம் புதிய திரைப்படம் கூட வெளியாகுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
தியேட்டர் உரிமையாளர்கள் டிக்கெட் கட்டண உயர்வு முறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி பலன் கிடைக்காத பட்சத்தில் விஷால் தலைமையில் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட ஒருங்கிணைந்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தீபாவளி அன்று வெளியாகும் மெர்சல் திரைப்படமானது தியேட்டரில் இறங்குவது சந்தேகமாகவே உள்ளது என திரைத்துறையினர் கூறி உள்ளனர்.