படத்தை மாபெரும் வெற்றி பெற செய்த அனைவருக்கம் நன்றி தெரிவித்த தளபதி!
மெர்சல் திரை படம் தீபாவளிக்கு வந்து வெற்றிகரமாக ஓடி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .படத்திற்கு பல்வேறு பிரச்சினைகள் இருந்தது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஜி.எஸ்.டி,டிஜிட்டல் இந்தியா,பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பா.ஜ.க. எதிப்பு தெரிவித்து இருந்தது .இந்த காட்சியை நீக்க கோரியும் வழக்கு தொடரபட்டுள்ளது.அது ஒரு புறம் இருந்தாலும் படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது .இந்நிலையில் நடிகர் விஜய் அனைத்து விதமான ரசிகர்கள் ,பொது மக்கள் ,பத்திரிக்கை ,தொலைகாட்சி ,அரசியல் கட்சி தலைவர்கள் ,தயாரிப்பாளர்கள் சங்கம் ,நடிகர் சங்கம் திரை பட உலகை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும் அவரது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாகக் கூறினார்.