புரோ கபடி : நூலிலையில் வெற்றியை தவறவிட்ட தமிழ் தலைவாஸ்…!
சென்னை : சென்னையில் நடந்து வரும், புரோ கபடி போட்டியில், ஜெய்ப்பூர் பாந்தர்ஸ் அணியிடம், தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை தழுவியது.சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில், 5வது புரோ கபடி போட்டி நடந்து வருகிறது. அதில், நேற்று முன்தினம் நடந்த போட்டியில், ஜெய்ப்பூர் பாந்தர்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் மாறிமாறி புள்ளிகளை எடுத்தாலும், சமநிலை, முன்னிலை என, புள்ளிகள் கூடினாலும், முதல் பாதியில், ஜெய்ப்பூர் அணி 17-15 என, இரண்டு புள்ளிகள் தமிழ் தலைவாஸ் அணியை விட கூடுதலாக எடுத்தது.பின்னர் இரண்டாவது பாதியில், புள்ளிகளை எடுத்து வெற்றி பெற முனைப்பு காட்டிய, தலைவாஸ் அணியின் ஒரு சில தவறுகளால் முன்னிலை பெற முடியாமல் போனது. போட்டியின் முடிவில், ஜெய்ப்பூர் பாந்தர்ஸ், 27-26 என்ற புள்ளி கணக்கில், தமிழ் தலைவாஸ் அணியை தோற்கடித்தது.