மெர்சல் படத்தின் காட்சிகளை நீக்க வலியுறுத்திய ( மிரட்டல் விடுத்த ) விவகாரம் – கமல் ஹாசன் கண்டனம்
மெர்சல் படத்தில் உள்ள ஜிஎஸ்டி குறித்தான வசனத்திற்கு பிஜேபியின் தமிழக தலைவர்கள் தமிழிசை,ஹெச்.ராஜா,பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டியும் வந்தனர்.
இதற்கு அடிபணிய வேண்டாம் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது;மெர்சல் படமானது தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு படம் வெளியிடப்படலாம் என சான்று பெற்ற பிறகு இன்னொரு முறை தணிக்கைக்கு உட்படுத்த கூடாது.மேலும்
பிஜேபி கட்சியினர் விமர்சகர்களின் குரலை நெறிக்காமல் விமர்சனங்களுக்கு ஆக்கப்பூர்வமான பதிலளிக்க வேண்டும்
பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்பினால் தான் இந்தியா ஒளிர்வதாக அர்த்தம் என்று அவர் தனது ட்விட்டர் பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.