அஜித்தை இயக்கபோவது இரட்டை இயக்குனர்களா?!! : இயக்குனர்கள் விளக்கம்
‘விக்ரம்-வேதா’ திரைபடத்தின் வெற்றிக்கு பின் இரட்டை இயக்குனர் புஷ்கர்-காயத்ரி, அடுத்த இயக்க போகும் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகம் ஆகியுள்ளது.
இந்நிலையில் விவேகம் படத்திற்கு பின் அஜித்தை இயக்கபோவது யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. அதில் இயக்குனர் சிவாவும், புஸ்கர்-காயத்ரி ஆகியோரது பெயரும் அடிபட்டது.
இதனை உறுதிபடுத்த இயக்குனர் புஷ்கர்-காயத்ரி-யிடம் தொடர்பு கொண்டபோது, அவர்கள் ‘ நாங்கள் கதைகளத்தை முழுவதும் தயார் செய்து விட்டுதான் கதாநாயகரை தேர்வு செய்வோம்.
இந்நிலையில் நாங்கள் கதைகளத்தையே முடிவு செய்யவில்லை, அதற்குள் அஜித்தை இயக்கபோவதாக வந்த செய்தியில் உண்மையில்லை’ என தெரிவித்தனர்.