விஜயின் மெர்சல் படத்திற்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமா .பேச்சு!
இளைய தளபதி விஜய் நடித்துள்ள படமான மெர்சல் படம் வெளியான பின்னாரும் பா.ஜா.க தலைவர்கள் எதிர்த்து வருகின்றனர் .என்னவென்றால் படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் தான் காரணம் .
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் படத்தில் மத்தியில் ஆளும் பா.ஜா.க அரசு வெளியட்ட திட்டங்களை குறை கூறுவதாக உள்ளது .
ஏனெனில் படத்தில் டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜி.எஸ். டி. குறித்த காட்சிகள் உள்ளன .
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜா.கவினர் கருத்து கூறி வருகின்றனர். படத்தில் அவர்கள் அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்கள் கூறித்து இடம் பெற்றுள்ள கட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக பா.ஜா.க தலைவர் தமிழிசை மற்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் இன்று பா.ஜா.க தேசிய செயலாளர் ஹைச்.ராஜாவும் அவரது கண்டனங்களை தெரிவித்தார்.
ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் மெர்சல் படத்தில் இடம் பெற்ற்றுள்ள கட்சிகளுக்கு சார்பாக பேசியுள்ளார்.படத்தை பொறுத்தவரை பா.ஜா.க வினர் மட்டுமே படம் வெளியான பிறகு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் மற்றவர்கள் எல்லாம் விஜய் படத்திற்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.