மெர்சல் படத்தின் மீது மீண்டும் விமர்சனம் வைத்த பா.ஜா.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா..
விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான திரைப்படம் மெர்சல் .படம் வெளியீட்டுக்கு முன்னரே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது.ஆனால் வெளியான பின்னரும் படம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது .
குறிப்பாக தமிழக பா.ஜா.க. தலைவர் தமிழிசை சௌந்தராஜேன் படத்தில் டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜி.எஸ்.டி. குறித்து வெளியானதாக கூறி.பின்னர் படத்தில் இருந்து அந்த கட்சிகளை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததார் .
அதன் பின்னர் மத்திய அமைச்சர் பொன் .ராதா கிருஷ்ணன் அதே போல் அவரும் விமர்சனம் வைத்தார்.
பின்னர் இன்று கூறிய பா.ஜா.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விஜயின் மெர்சல் திரைப்படம் மோடிக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் இதன் மூலம் விஜய் படம் மோடி மீது உள்ள வெறுப்பையே பிரதிபலிப்பதாக கூறினார் .
இதனால் விஜய் நடித்த மெர்சல் படத்தின் மீது அவர் கடும் விமர்சனங்களை பதிவுசெய்தார் .
குறிப்பாக கூற வேண்டும் என்றால் சினிமா ஆரம்பித்த முதலே அரசியலை சார்ந்த கருத்துகள் பதிவு செய்து வருகின்றனர் .இருந்தாலும் இது குறிப்பிட்ட நபர் மீதான விமர்சனமா அல்லது அந்த படத்தில் இடம் பெற்ற ஜி.எஸ்.டி. குறித்த விமர்சனமா என்ற எண்ணம் வருகிறது .