வசூலில் முதல் இடத்தை நோக்கி போகும் மெர்சல்
தீபாவளியன்று வெளியான மெர்சல் திரையிட்ட அனைத்து ஏரியாகளிலும் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் இதன் வசூல் இதுவரை, விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஐ திரைபடத்தின் மொத்த வசூலை முறியடித்துள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் மெர்சல் படம் இதுவரை 30.000 என்ட்ரீஸ்-ஐ கடந்து வெற்றி நடைபோடுகிறது.
தற்போது வந்த தகவலின் படி முதல் இடத்தில் ரஜினியின் எந்திரன் படமானது 40,000 என்ட்ரீஸ்-ஐ பெற்றுள்ளது. மெர்சல் இன்னும் நன்றாக ஓடிகொண்டிருப்பதால் இப்படம் கண்டிப்பாக எந்திரனை முறியடிக்கும் என நம்பபடுகிறது.