மலேசியாவில் ரஜினி,கமல் படம் வெளியாகத திரையரங்கில் ரிலீஸ் ஆகும் தளபதி விஜயின் மெர்சல்
சினிமாவில் 25 வருடங்களை கடந்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் இளைய தளபதி விஜய்.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனகம் உள்ளார்.
தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே விஜய்யின் மெர்சல் படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
படத்தின் ரிலீஸில் நிறைய பிரச்சனைகள் வந்தாலும் படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகிவிடும் என்று ரசிகர்கள் நம்பிக்கையாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் மலேசியாவில் மிகவும் பிரபலமான King’s Trioplex என்ற திரையரங்கில் தமிழ் படமான மெர்சல் படம் வெளியாக இருக்கிறதாம்.
இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் அந்த திரையரங்கில் வெளியானது இல்லையாம்,மெர்சல் படம் வெளியாவதை மிகவும் அவளாக மலேசியா விஜய் ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்து கொண்டு இருகின்றனர்.