விஜயின் வாக்காளர் அட்டையை வெளியிட்ட பிஜேபி தேசிய செயலாளர் ஹேச்.ராஜா…ஏன்.. எதற்கு…?
இப்போது தமிழகத்தில் பெரும் விவாத பொருளாக மாறியிருக்கிறது இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான “மெர்சல்” திரைப்படம். இப்படத்தில் ஜிஎஸ்டி குறித்தான வசனத்தை நீக்க சொல்லி பயங்கரமாக மிரட்டி வருகிறார்கள் பிஜேபி தலைவர்கள் தமிழிசை,பொன்னார்,ஹேச்.ராஜா,இல.கணேசன்.இந்நிலையில் விஜயையும் அவரது மதத்தையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார் பிஜேபி தேசிய செயலாளர் ஹேச்.ராஜா.ஆனால் தற்போது விஜயோட வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டுள்ள ஹேச்.ராஜாவால் மேலும் பல சர்ச்சைகள் வெடித்துள்ளன. மேலும் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ” இதுல இருந்து என்ன சொல்லவரீங்க…. எத்தன நாளைக்கு டா , சாதியையும் ,மதத்தையும் , பேரையும் வச்சு அரசியல் பண்ணுவீங்க” என தொடர்ந்து வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர் விஜயின் ரசிகர்கள்….