நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகிறது தெலுங்கு மெர்சல் !அங்கு சாதனை படைக்குமா ?
தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் மெர்சல் .தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படம் பல்வேறு எதிப்புகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது.மேலும் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது வருகிறது.தமிழ் மொழியில் மட்டும் வெளியாகி படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில் இந்த படம் தெலுங்கில் அதிரிந்தி என்ற பெயரில் வெளியாகிறது .மேலும் இந்த படம் அங்கு மட்டும் சுமார் 400 திரையரங்குகளில் வெளியாகிறது .மேலும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்திய தொடர்பான வசனங்கள் இதில் நீக்கப்பட்டுள்ளது.இதனால் படத்தில் இந்த காட்சிகள் இடம் பெறவில்லை.மேலும் அனைத்து தரப்பினருமே இந்த படம் வசூலில் மேலும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கபடுகிறது.