அடுத்து பெரிய ஹீரோ படத்தில் இந்த நாயகியா!!!???
கல்யாணம் முதல் காதல் வரை என்ற தமிழ் சீரியல் மூலம் மிக பிரபலமடைந்த நடிகை பிரியா பவானிசங்கர். இவர் தற்போது அறிமுகமாயிருக்கும் திரைப்படம் ‘மேயாத மான்’. இத்திரைபடத்தை பார்த்த பலரும் இதனை வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தான் வெகு நாட்கள் கழித்து சிரித்து மகிழ்ந்த திரைப்படம் என புகழ்ந்துள்ளார்.
இந்த நடிகை அடுத்து நடிக்க போகும் திரை படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை ‘பசங்க’ புகழ் இயக்குனர் பாண்டிராஜ் இயக்குள்ளார். இப்படத்தில் மேலும் ஒரு நாயகியாக ப்ரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடிக்க உள்ளார் என்பது நமக்கு கிடைத்த மற்றொரு தகவல். இதனை கண்டு மற்ற நடிகைகள் பொறாமையில் உள்ளனர்.