தியேட்டர்கள் சங்கதின் மீது நடிகர் விஷால் பாச்சல்..!தியேட்டர்களுக்கு புதிய விதிமுறைகள் விதிப்பு..!
தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வு, கேளிக்கை வரி ஆகிய விவகாரங்களில் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் சங்கங்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் சங்கத்தினர் தியேட்டர்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளனர்.
1. இனி ஆன்லைன் மற்றும் பார்க்கிங் கட்டணம் கிடையாது
2.அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கவேண்டும்
3. கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும்
4. அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும்
5. தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும்
6. பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது
7. விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்.
மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படடும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.