வேலைக்காரன் பர்ஸ்ட் லுக் காப்பியா? : இயக்குனர் போட்டுடைத்த உண்மை
தனி ஒருவன் புகழ் மோகன் ராஜா இயக்கும் திரைப்படம் வேலைக்காரன் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இப்படம் வருகிற கிருஸ்துமஸ் வருவதாக தெரிகிறது,
இந்நிலையில் இயக்குனர் மோகன் ராஜா அளித்த பேட்டியில் கூறியதாவது “இது முழுக்க முழுக்க தொழிலாளர்களை பற்றிய திரைப்படம் என தெரிவித்தார். மேலும் இதன் பர்ஸ்ட் லுக் காப்பி பற்றி அவரிடம் கேட்டதற்கு அவர் “நானும் அதை பார்த்தேன்.
ஆனால், அவர்களுக்கு தெரிஞ்ச விஷயம் எனக்கு தெரியாமல் இருக்குமா?, நானும் அந்த ஆங்கிலப்படத்தை பார்த்துள்ளேன்.
எங்களுக்கு இந்த படத்திற்கு இப்படி ஒரு ஐடியா தேவைப்பட்டது, மற்றப்படி அந்த படத்திற்கும், இதற்கும் துளிக்கூட சம்மந்தமில்லை”
என தெரிவித்தார்.