சியான் விக்ரமுக்கு ஒன்னு இல்ல ரெண்டு இல்ல பல பேர் எனக்கு வில்லனா இருக்காங்க போட்டுடைத்த பிரபல இயக்குனர்…!
சியான் விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் படம் டிசம்பர் மாதம் வெளி வரவுள்ளது. இப்படத்தை இயக்கிய விஜய் சந்தர் சமீபத்தில் இப்படம் குறித்து பேசுகையில், ‘ஸ்கெட்ச் வடசென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். வடசென்னையைப் பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் இது முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணத்தில் இருக்கும் என அடித்து கூறுவேன். அங்கு வாழும் சில உண்மையான மனிதர்களை வைத்து உருவாக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் அப்படியே உள்ளனர். மேலும் வடசென்னை என்றாலே ஆக்ரோஷமான மனிதர்கள் நிறைந்த இடம். அதனால், படத்தில் ஒரே ஒரு வில்லன் கிடையாது, பல வில்லன்கள் இருக்கின்றனர், அது படம் பார்க்கும் போதுதான் உங்களுக்குத் தெரியும்’ என்றார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விக்ரமின் 53-வது படமிது என்பது குறுப்பிடத்தக்கது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்ததுள்ளது. ராதாரவி, ஸ்ரீபிரியங்கா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக முதல் முறையாக தமன்னா நடிக்கிறார்
.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார்.