சவூதி அரேபியாவில் பெண்களுக்கான கட்டுப்பாடு நீக்கம்..,
சவூதி அரேபியாவில் உள்ள பள்ளிகளில் படிப்படியாக மாணவிகள் விளையாட்டுகளில் ஈடுபடுவது அறிமுகம் செய்யப்படும் என்றும், அதுவும் ஷரியா மதக் கோட்பாடுகளுக்கு உட்பட்டே இருக்கும் என்றும் அந்நாட்டு கல்வித் துறை அறிவித்துள்ளது.
மேலும், 4 ஆண்டுகளுக்கு முன்புதான், சவூதி அரேபியாவில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் முதன் முதலாக பங்கேற்றார்.
சவூதியில் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிறது. வாகனம் ஓட்ட பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு பெண் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள, ஆண் பாதுகாவலரின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.