ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் ‘வாரிசு’.! எப்போது தெரியும்..?
விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற வாரிசு திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாரிசு
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘வாரிசு ‘. இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தில் சரத்குமார், பிரபு, ராஷ்மிகா, ஷாம் என பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
வாரிசு ஓடிடி
திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற வாரிசு திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, வாரிசு திரைப்படம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசு வசூல்
தமிழ், தெலுங்கு, கன்னடம். ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி வரை வசூல் செய்து மிக பெரிய பிளாக் பஸ்டர் படமாகியுள்ளது. இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.