பிடி சார் வசூல் : ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான பிடி சார் திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான பிடி சார் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் பற்றி மையமா வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தினை கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார். படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார்.
படத்தில் அனிகா சுரேந்திரன், இளவரசு, பாண்டியராஜன், முனிஷ்காந்த், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஹிப்ஹாப் ஆதியே இசையமைத்தும் இருக்கிறார். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் மிகவும் நன்றாக இருந்த காரணத்தால் படத்தை பார்த்த மக்கள் அனைவரும் படம் நன்றாக இருப்பதாகவும், கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு நல்ல படம் எனவும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். விமர்சனங்கள் பாசிட்டிவாக வருவதால் படத்திற்கு வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் இந்த பிடி சார் திரைப்படம் 1 கோடி வரை வசூல் செய்து இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து சனி , மற்றும் ஞாயிற்றுக் கிழமை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வசூலும் அதிகரித்துள்ளது. அதன்படி, வெளியான 3 நாட்களில் படம் மொத்தமாக 5 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…