கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்திற்கான க்ளிம்ப்ஸ் வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்பட, தமிழ் சினிமாவில் இன்னும் வெளியாகாமல் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கும் படங்களில் ஒன்று. இந்த படத்தினுடைய முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டாவது பாகத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து இருக்கிறர்கள்.
படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசையமையாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் வருகின்ற நவம்பர் 7-ஆம் தேதி கொண்டாடபடவிருக்கும் நிலையில், படத்தின் புதிய க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகவுள்ளதாகவும் அதனை தமிழ் மொழியில் ரஜினிகாந்த் வெளியிடுவதாகவும் முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது படத்திற்கான க்ளிம்ப்ஸ் வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா வெளியீட்டு இருக்கிறது.
க்ளிம்ப்ஸ் வீடியோவை சிறிது நேரம் இருந்தாலும் அதில் வரும் காட்சிகள் பார்ப்பதற்கு படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. அத்துடன் அனிருத் பின்னணி இசையும் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் அவர் பேசும் வசனங்கள் எல்லாம் பார்ப்பதற்கு மெய் சிலிர்க்க வைத்து இருக்கிறது.
சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா என பலரும் இந்த வீடியோவில் வருகிறார்கள். இந்த சின்ன விடியோவில் ஷங்கர் பிரமாண்டமாக காட்சிகளை காட்டியிருக்கிறார் என்றால் கண்டிப்பாக படத்திலும் பல பிரமாண்டமான காட்சிகள் வரும் என்பதில் சந்தேகமே இல்லை. எனவே, இந்த க்ளிம்ப்ஸ் பார்த்த பலரும் படத்திற்கு ஆவலுடன் காத்திருப்பதாக கூறி வருகிறார்கள். மேலும் அடுத்த ஆண்டு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டே படம் வெளியாவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…