கோடி கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட பையா கிளைமாக்ஸ்! கடைசி நேரத்தில் மாற்றியது ஏன் தெரியுமா?
பையா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முதலில் வேறு என்றும் அதனை பல கோடிகள் செலவு செய்து எடுத்ததாக இயக்குனர் லிங்கு சாமி தெரிவித்துள்ளார்.
பையா
நடிகர் கார்த்தி இதுவரை பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பேவரைட்டான திரைப்படம் என்றால் இயக்குனர் லிங்கு சாமி இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியான பையா படம் பலருடைய பேவரைட் படமாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருப்பார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
படத்தில் சோனியா தீப்தி, ஜெகன் அயன், மிலிந்த் சோமன், அர்பித் ரங்கா, உமர் லத்தீப் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தை லிங்கு சாமியே தயாரித்தும் இருந்தார்.
உருக வைத்த காதல் காட்சிகள்
இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த காதல் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு அந்த சமயமே மிகவும் பிடித்திருந்தது என்றே சொல்லாம். அத்துடன் படத்தில் யுவன் இசையுடன் அந்த காட்சிகளை பார்க்கும்போது இதை விட ஒரு உணர்வு கொடுக்கக்கூடிய காதல் திரைப்படம் எடுக்கமுடியுமா? என்கிற அளவுக்கு படத்தை பார்க்கும்போது இருக்கும் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் அந்த சமயம் மிகப்பெரிய ஹிட் ஆனது.
கோடி செலவு செய்த எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ்
இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தமன்னாவை கார்த்தி எந்த அளவிற்கு காதலித்தார் என்பதை பற்றி சோனியா தீப்தி தமன்னாவிடம் சொல்லி புரியவைப்பார் பிறகு இதையெல்லாம் கேட்டுக்கொண்ட தமன்னா எமோஷனலாக கார்த்தியை கட்டிபிடிப்பார் அத்துடன் படமும் முடிந்துவிடும். ஆனால், முதலில் இந்த மாதிரி கிளைமாக்ஸ் காட்சியை இயக்குனர் லிங்கு சாமி வைக்கவில்லையாம்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வேறு மாதிரி இருக்கவேண்டும் என்ற காரணத்தால் கோடி கணக்கில் செலவு செய்து லிங்கு சாமி ஒரு கிளைமாக்ஸ் எடுத்துவிட்டு படத்தை பார்த்தாராம். படத்தை பார்த்த பிறகு அவருடன் நட்பில் இருந்த இயக்குனர்கள் மற்றும் சில பிரபலங்கள் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றலாம் சரி இல்லை என கூறினார்களாம். அதன் பிறகு தான் கிளைமாக்ஸ் காட்சியை லிங்கு சாமி மாற்றினாராம். இந்த தகவலை லிங்கு சாமியே பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
பையா 2 உருவாகிறதா?
மேலும், பையா படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அடுத்ததாக இயக்குனர் லிங்கு சாமி படத்தின் இரண்டாவது பாகத்தையும் எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தற்போது அதற்கான வேளைகளில் தான் லிங்கு சாமி ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .