ஆதரவற்றவர்களுக்கு பிரியாணி ! அசத்தும் இமான் அண்ணாச்சி!
ஆதாரவற்றவர்களுக்கு பிரியாணி சமைத்து கொடுக்கும் இமான் அண்ணாச்சி.
இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, இந்திய ராசு மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதனால், வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும் மக்கள் பலர் உணவின்றி தவித்து வருகின்றனர்.
மக்களின் பசி போக்க பிரபலங்கள் பலர் தங்களால் இயன்ற நிவாரண பொருட்களை வழங்கி மக்களின் பசி ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், இமான் அண்ணாச்சி தானே பிரியாணி செய்து, சென்னையில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகிறார். இவரது இந்த செயலுக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.