பிரபல இசையமைப்பாளருக்கு இன்று பிறந்த நாள் !!!!
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தமிழ் சினிமாவின் மிக சிறந்த திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் , பாடல்களும் அமைத்துள்ளார்.
2001ஆம் ஆண்டு ‘ தமிழன் ‘ திரைப்படத்தில் முதலாவதாக இசையமைத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இந்நிலையில் டி. இமான் ‘ விசில் ‘ திரைப்படத்திற்கு இசை அமைத்ததற்கு பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது. மேலும் இவர் மிகக் குறைந்தக்காலத்திலேயே அதிக திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பிரபல இசை அமைப்பாளர் டி.இமானுக்கு பிறந்தநாள். எனவே இவருக்கு ரசிகர்களும் ,பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.