தனுஷ் பாடலுக்கு தாறுமாறாக குத்தாட்டம் போடும் பிக்பாஸ் பிரபலங்கள்!
உலகநாயகன் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, இறுதிக்கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள், காலையில் எழுந்தவுடன், தனுஷின் தங்கமாரி ஊதாரி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போடுகின்றனர்.