தளபதி ரசிகர்களுக்கு ஞாயிறு விருந்து !உறுதியானது பிகில் இசை வெளியீட்டு விழா
இயக்குனர் அட்லீயுடன் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் பிகில் திரைப்படம்.இந்த படத்தில் நயன்தாரா,கதிர்,விவேக் ,யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து வருகிறது.மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 19 ஆம்தேதி நடைபெறுகிறது.இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.மேலும் வருகின்ற 22-ஆம் தேதி சன் டி.வி.யில் மாலை 6.30 மணிக்கு இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாகிறது.