நாங்க தான் டாப்பு !கெத்து காட்டும் பிகில் ட்ரெய்லர்
தமிழ் சினிமாவில் அதிக லைக்ஸ் பெற்ற முதல் ட்ரெய்லர் என்ற பெருமையை பெற்றுள்ளது பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர்.
தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.முக்கிய பிரபலங்களும் படத்தின் ட்ரெய்லர் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிகில் படத்தின் ட்ரெய்லர் இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்திய அளவில் பிகில் ட்ரெய்லர் அதிக லைக்ஸ் பெற்று 3-ஆம் இடத்தை பிடித்துள்ளது.மேலும் விரைவாக தமிழ் சினிமாவில் அதிக லைக்ஸ் பெற்ற முதல் ட்ரெய்லர் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இந்திய அளவில் முதல் இடத்தில் பாலிவுட் படமான Zero : 1.9 மில்லியன் லைக்குகள் ,மற்றொரு பாலிவுட் படமான WAR : 1.65 மில்லியன் லைக்குகளும் பெற்றுள்ளது. பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் 16 மணி நேரத்தில் 1.6 மில்லியன் லைக்குகள் பெற்றுள்ளது.