தளபதியுடன் வெறித்தனமாக பட ரெடியான சூப்பர் சிங்கர் பூவையார்!
தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பிகில் திரைப்படம் தயராகி வருகிறது. இப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, கதிர், யோகிபாபு என பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன் முதலாக விஜய் பாட உள்ளார். இதற்க்கு முன்னர் விஜய் பல படங்களில் பாடியிருந்தாலும் இசைப்புயல் இசையில் பாடுவது இதுவே முதல் முறை.
இந்த தகவலை அண்மையில் படக்குழு அறிவித்தது. மேலும் ஒரு தகவலாக இப்பாடல் லோக்கல் பாடலாக உருவாக உள்ளது. இதில் விஜயுடன் சேர்ந்து சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் பாட உள்ளார்.