#BiggBossTamil6 : டைட்டிலை தட்டி சென்ற போட்டியாளர் இவரா..? கொண்டாடும் ரசிகர்கள்.!
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 6 தமிழ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நிகழ்ச்சி தொடங்கி 103 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த சீசனின் கடைசி வாரத்திற்கான ஓட்டு இன்றுடன் முடித்துள்ளது.
போட்டியில் தற்போது அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் இருக்கிறார்கள். இதனையடுத்து, இந்த வாரம் ஓட்டுக்களின் அடிப்படையில் முன்னணியில் இருப்பவர்தான் இந்த பிக்பாஸ் 6-வது சீசனில் டைட்டிலை தட்டி செல்ல போகிற நபர்.
இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் டைட்டிலை வின்னர் யார் என்பது குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், விக்ரமன் டைட்டில் வின்னராகவும், அஸீம் 2-வது இடத்தையும் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து விக்ரமன் ரசிகர்கள் டிவிட்டரில் #VikramanBB6TamilTitleWinner ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள். உண்மையில் யார் வெற்றி பெற்றுள்ளார் என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் தெரியவரும்.