பிக்பாஸ் பாதியில் வெளியேறினால் இவ்வளவு பெரிய அபராதமா?!
பிக் பாஸ் நிகழ்ச்சி பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என அனைத்து தரப்பிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதில் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் டீவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முன்னாள் இந்திய கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த் பங்கேற்றுள்ளார்.
இதில் பங்கேற்ற இரண்டாவது நாளே அங்குள்ள போட்டியாளர்களிடம் சண்டை போட்டு என்னை வெளியேற்றுங்கள் என கூறி விட்டார்.
அவர் கலர்ஸ் டீவியுடன் போடபட்ட ஒப்பந்தத்தை மீறி பாதியில் வெளியேறினால் அந்த சேனலுக்கு சுமார் 50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என {கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை சட்டப்படி நடக்கும் எனவும் கூறபட்டுள்ளது.
DINASUVADU