biggboss 3: ஏன் இப்பிடி பண்ணிட்டாரு? கவின் தான் இதற்கெல்லாம் பதில் சொல்லணும்!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, இன்னும் ஒரு வாரங்களில் நிறைவு பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் அனைவராலும் காதல் மன்னன் என்று அழைக்கப்பட்ட கவின், 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இவரது இந்த செயலை மற்ற போட்டியாளர்கள் தடுத்த போதிலும், அவர் கேட்கவில்லை.
இந்நிலையில், உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கூறுகையில், கவின் ஏன் இப்படி செய்தார்?, இப்படி பண்ணிட்டாரே? இந்த கேள்விக்கெல்லாம் கவின் தான் பதில் சொல்ல வேண்டும் என கூறுகிறார்.