biggboss 3: என்னமா இப்பிடி பண்ணுறீங்களேம்மா! லொஸ்லியாவை வச்சி செய்யும் பிக்பாஸ்!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக, இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் நாமினேஷன் நடைபெற்று வருகிறது. அதில் பிக்பாஸ், லொஸ்லியாவிடம் நீங்கள் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என கேட்கிறார். அதற்கு லொஸ்லியா கவினை காப்பாற்ற விரும்புவதாக கூறுகிறார்.
உடனே பிக்பாஸ், அவரை காப்பாற்ற வேண்டுமென்றால் ஒரு பச்சைமிளகாயை சாப்பிடவேண்டும் என கூறுகிறார். அதற்கு லொஸ்லியா சிரித்துக் கொண்டே இருக்கிறார். உடனே பிக்பாஸ் லொஸ்லியா சீரியஸா இருங்க. இது நாமினேஷன் ப்ராசஸ் என கூறியுள்ளார்.
#Day92 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/qMotMeAOU5
— Vijay Television (@vijaytelevision) September 23, 2019