biggboss 3: மறுபடியும் முதல்ல இருந்தா? மீண்டும் இரண்டு கிராமங்களாக பிரிந்த பிக்பாஸ் இல்லம்! அவர்கள் கற்றுக் கொள்ள போவது என்ன?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியானது 65 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது, 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் இல்லம் இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது. இதனையடுத்து, நாம் மறந்து போன சில கலாச்சார கலைகளை, இந்த மண்ணின் கலைஞர்கள் கற்றுக் கொடுக்க உள்ளார்கள். பிக்பாஸ் பிரபலங்கள் இதனை முறையாக கற்றுக் கொண்டு தினமும் மலையில் அதனை அரங்கேற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.
#Day65 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/3Gnzifgkqk
— Vijay Television (@vijaytelevision) August 27, 2019