biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! மண்டியிட்டு கதறி அழும் லொஸ்லியா!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 75 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களுக்கு புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது freeze என்ற டாஸ்க் பிக்பாஸ் வீட்டில் அடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லொஸ்லியா தனது தந்தையை பிரிந்து பல வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், சேரன் தனது தந்தையை போல இருப்பதால், சேரனை அவர் அப்பா என்றழைப்பதுண்டு. இந்நிலையில், இந்த டாஸ்க்கிற்காக சேரனும், பல வருடங்கள் பிரிந்திருந்த அவரது தந்தையும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்கள்.
தனது தந்தையை பார்த்த லொஸ்லியா, மண்டியிட்டு கதறி அழுகிறார். இதனை பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற பிரபலங்களும் கண்ணீர் சிந்துகின்றனர்.