biggboss 3: முகன் பாட! லொஸ்லியா ஆட! கலகலப்பான பிக்பாஸ் இல்லம்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளானார்.
இந்நிலையில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா தற்போது சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளார். வீட்டிற்குள் நுழைந்த உடனேயே சண்டை தொடங்கி விட்டது. இவர் முதலில் கை வைத்தது அபிராமி மற்றும் முகனின் காதலில் தான்.
முகனை பற்றி அபிராமியிடம் வெளியில் நடந்ததையெல்லாம் சொல்லி, அபிராமி மற்றும் முகனுக்கு இடையே சண்டையை ஏற்படுத்தியுள்ளார். இந்த சண்டை வாக்குவாதத்தில் துவங்கி, இரண்டு பெரும் மாறி, மாறி அடித்துக் கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது.
இந்நிலையில், என்ன தான் நடந்தாலும், தன்னுடைய சோக முகத்தை வெளியில் காட்டாமல், அனைவரோடும் சேர்ந்து பாடல் பாடி சந்தோசமாக உள்ளார். முகனின் பாடலுக்கு லொஸ்லியா நடனமாடுகிறார்.
#Day53 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/dc02G81gaS
— Vijay Television (@vijaytelevision) August 15, 2019