biggboss 3: என்னை பொறுத்தவரைக்கும் ஜாலியா இருக்கணும்! செம்மையா இருக்கணும்!
பிக்பாஸ் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதி சுற்றுக்கு லொஸ்லியா, சாண்டி, முகன் மற்றும் ஷெரின் நான்கு பெரும் முன்னேறியுள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ள நடுவர்கள் சாண்டியிடம், என்னதான் நீங்க ஃபீல் பண்ணி அழுதாலும், கொஞ்சம் game-அ சேஃப்பா விளையாடுறிங்களோ? என கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளித்த சாண்டி, என்ன பொறுத்தவரைக்கும் நான் உள்ள வந்து ஜாலியா இருக்கணும் செம்மையா இருக்கணும். அதை நீங்கள் எப்பிடி வேணும்னாலும் எடுத்துக்கிடலாம் என கூறுகிறார்.