biggboss 3: எப்படி பேசணும்னு தெரியல! உண்மை எது? பொய் எது புரியல?
பிரபல தனியார் தொலைக்காட்சியில், 70 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிற நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், தர்சன், சேரனிடம் பிக்பாஸ் எதற்காக இப்படி ஒரு குற்றசாட்டை வைத்துள்ளார் என கேள்வி எழுப்புகிறார். அதற்கு சேரன், எப்போது கவினுடன் பேச துவங்கினாரோ அப்போது தான் என துவங்கிய அவர், சபையில் எதை பேச வேண்டும், வெளியில் எதை பேச வேண்டும் என தெரியவில்லை என கூறுகிறார்.